கார் மோதி வாலிபர் படுகாயம்

போடியில் கார் மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-08-22 18:45 GMT

போடி சின்னச்சாமி தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 28). நேற்று முன்தினம் காலை இவர், போடியில் தேனி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்