மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் சாவு
மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் சாவு
பேராவூரணி அருகே பைங்கால் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது22). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்த அய்யப்பன் சபரிமலை கோவிலுக்கு மாலை அணிந்து சென்று சாமி தரிசனம் செய்தார். நேற்றுமுன்தினம் ஊருக்கு திரும்பிய அய்யப்பன் கோவில் பிரசாதத்தை பேராவூரணி அருகே துறையூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீடுகளுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொடுத்துவிட்டு பைங்காலுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீரியன்கோட்டை கடைதெரு பகுதியில் வந்தபோது, மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அய்யப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அய்யப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.