மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
திருப்பரங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
ிருப்பரங்குன்றம்,
மதுரை சோலையழகுபுரம் பவர்ஹவுசிங் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 34). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் அருகே உள்ள சூரக்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சூரக்குளம் அருகே நான்குவழிச்சாலையில் வந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி ரஞ்சித்குமார் கீழே விழுந்தார். அதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.