அரசு பஸ் மோதி வாலிபர் பலி

வீரபாண்டி பைபாஸ் சாலை அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி பலியானார்

Update: 2023-06-24 20:00 GMT

தேனி அல்லிநகரம், அம்பேத்கர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் வடிவேலு (வயது 35). இவர் நேற்று முன்தினம் கம்பத்திற்கு சென்றார். பின்னர் அவர், தனது நண்பரான கம்பத்தை சேர்ந்த லோகு (35) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தேனி நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தார். வடிவேலு மோட்டார் சைக்கிளை ஓட்டினார். லோகு பின்னால் அமர்ந்து வந்தார். வீரபாண்டி பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் அவர்கள் வந்தபோது, எதிரே வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து வடிவேலு, லோகு தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில், வடிவேலு சம்பவ இடத்திலேயே பலியானார். லோகு உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் லோகுவை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவரான அனுமந்தன்பட்டியை சேர்ந்த கண்ணன் மீது வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்