வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தென்காசி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-23 17:10 GMT

தென்காசி அருகே உள்ள பாட்டப்பத்து என்ற பகுதியைச் சேர்ந்த காமராஜ். கூலி தொழிலாளி. அவருடைய மகன் இசக்கி துரை (வயது 19). இவர் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு மேற்படிப்பும் படிக்காமல் வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் இவர் நேற்று தனது பெற்றோரிடம் தனக்கு விலை உயர்ந்த செல்போன் வாங்கித் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவரது பெற்றோர் மறுக்கவே திடீரென வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார். பின்னர் வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை தட்டி பார்த்துவிட்டு கதவை திறந்தனர். அப்போது இசக்கி துரை மின்விசிறி கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்