எலி மருந்தை தின்று வாலிபர் தற்கொலை

திட்டச்சேரி அருகே எலி மருந்தை தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-23 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி, வாழ்மங்கலம் காமராஜ நகர் பகுதியை சேர்ந்த சுந்தரவடிவேல் மகன் இளவரசன் (வயது 20). இவர் பாலிடெக்னிக் படித்து முடித்து விட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரவடிவேல், இளவரசனை திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த இளவரசன் சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த எலிமருந்தை தின்றுள்ளார். இளவரசன் எலி மருந்தை தின்றதை அவரது பெற்றோரிடம் மறுநாள் தெரிவித்துள்ளார். உடனே அவரை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளவரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்