தி.மு.க. பிரமுகரை கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் வாலிபர் கைது

புழுதிவாக்கத்தில் திமுக பிரமுகரை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-01 01:43 GMT

ஆலந்தூர்:

சென்னையை அடுத்த புழுதிவாக்கம் ஜேக்கப் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். முன்னாள் நகராட்சி தலைவர். இவருடைய மூத்த மகன் ஜெ.கே.மணிகண்டன். இவர் தற்போது சென்னை மாநகராட்சி 186-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.

இவரது 2-வது மகன் ஜெ.கே.பர்மன் (42). முன்னாள் கவுன்சிலரான இவர், கடந்த 28-ந் தேதி காலை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பர்மன், படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுபற்றி மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் பர்மன் வீட்டின் அருகில் வசிக்கும் வேலாயுதம் மற்றும் அவருடைய மனைவி ஹேமாவதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை பர்மன் சமாதானப்படுத்த சென்றபோது அவருக்கும், ஹேமாவதியின் உறவினர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஹேமாவதியின் உறவினர்கள் பர்மனை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.

இந்தநிலையில் தி.மு.க. பிரமுகர் பர்மனை காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக துரைப்பாக்கம் ஒக்கியம்பேட்டையை சேர்ந்த வினோத் (36) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்