கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரிமளம் ரோட்டில் விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்த தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த கிரிதரனை (வயது 28) கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.