கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
அரக்கோணம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணத்தை அடுத்த சாலை கிராமம் பகுதியில் கஞ்சா விற்பதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி தலைமையிலான போலீசார் நேற்று காலை சம்பவ பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் நின்றிருந்த வாலிபர் போலீசார் வருவதை கண்டு தப்பி ஓடினர்.
அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்து விசாரித்த போது சாலை கைலாசபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 19) என்பது தெரிய வந்தது.
அவரிடம் சோதனை செய்ததில் அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சீனு என்கிற சீனிவாசனை போலீசார் தேடி வருகின்றனர்.