இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் தீவிரம்

சின்னசேலம் பகுதியில் இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பணியில் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-10-04 18:45 GMT

சின்னசேலம்

சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன், தொழிற்கல்வி ஆசிரியர் சக்திவேல் ஆகியோர் அப்பகுதியில் பள்ளியில் இடை நின்ற மாணவர்களை தேடி கண்டுபிடித்து மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சின்னசேலத்தை அடுத்த மரவநத்தம் கிராமத்தை சேர்ந்த குமார் மகன் தமிழ்செல்வன்(வயது 16). அரசு ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற வந்த இவனது தந்தை குமார் இறந்து விட்டதால் குடும்ப வறுமையால் தொடர்ந்து மேற்படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழ்செல்வன் தொடர்ந்து பிளஸ்-1 படிப்பை தொடராததை அறிந்த தலைமை ஆசிரியர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் இருவரும் அவனது வீட்டுக்கு சென்று மாணவனின் தாய் பாப்புவை சந்தித்து உரிய ஆலோசனை வழங்கினர். இதையடுத்து அவரும் மகனின் மேல் படிப்புக்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து தமிழ்ச்செல்வனை பள்ளிக்கு அழைத்து வந்து பிளஸ்-1 வகுப்பில் சேர்த்து அவன் தொடர்ந்து படிப்பதற்கு வழிவகை செய்து கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்