புதுச்சத்திரத்தில் ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சி முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

Update: 2022-12-05 18:45 GMT

புதுச்சத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சி 6 இடங்களில் நடந்தது. புதுச்சத்திரம், பாச்சல், ஏளூர், செல்லப்பம்பட்டி, திருமலைப்பட்டி மற்றும் காரைக்குறிச்சி புதூரில் நடந்த இந்த பயிற்சிகளில் 139 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்‌.

இதில் 1 முதல் 3-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் ஆங்கில ேபானிக்ஸ் பயிற்சியும், 4 மற்றும் 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சியும் கருத்தாளர்களால் வழங்கப்பட்டது. குறிப்பாக ஆர்வமூட்டும் செயல்பாடுகள் மற்றும் குழு செயல்பாடுகள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக ஆசிரியர்களின் வருகை செயலியின் மூலம் பதிவு செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பயிற்சி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்