ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறுவள மைய அளவில் 54 அரசு பள்ளிகளில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. தர்மபுரியில் நடந்த இந்த பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் குமார் தொடங்கி வைத்து பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கினார். மேலும் ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் மாணவர்களின் உடல் நலம், நல வாழ்வு திட்டம் குறித்தும், மனநலம் மற்றும் உணர்வெழுச்சி நலம் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கான உள்ளடக்கிய கல்வியை சிறந்த முறையில் வழங்குதல், மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அறிவுசார் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு என்னும் எழுத்தும் பயிற்சி மற்றும் வளரறி மதிப்பீடு, தொகுத்தறி மதிப்பீடு முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஹேமலதா, மாவட்ட கல்வி அலுவலர்கள் மான்விழி, ஷகில், உதவி திட்ட அலுவலர் சம்பத்குமார் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.