டாஸ்மாக் விற்பனையாளர் பணியிடை நீக்கம்

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற டாஸ்மாக் விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-08-07 18:53 GMT

அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் தலைமை அலுவலக அறிவுரையின்படி நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு எக்காரணத்தை கொண்டும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைப்பணியாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அவர்கள் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அனைத்து கடைப்பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

பணியிடை நீக்கம்

இந்நிலையில் கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், மசக்கவுண்டன்புதூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் கடந்த 5-ந்தேதி மாவட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த கடையின் விற்பனையாளர் குணசேகரன் என்பவர் மதுபாட்டிலின் விலையை விட ரூ.10 கூடுதலாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து குணசேகரன் மீது துறைரீதியான விசாரணை நடத்தி அவர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சண்முகவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்