டாஸ்மாக் கிட்டங்கி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கிட்டங்கி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-09-26 19:32 GMT

பெரம்பலூரில் வடக்குமாதவி சாலையில் தமிழ்நாடு மாநில வாணிப கழக (டாஸ்மாக்) கிட்டங்கியும், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகமும் உள்ளது. இந்த அலுவலகம் முன்பு தமிழ்நாடு டாஸ்மாக் கிட்டங்கி சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க (சி.ஐ.டி.யூ.) பெரம்பலூர் கிளை சார்பில் ேநற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மதுபானங்கள் கொண்ட பெட்டியை லாரிகளில் இருந்து இறக்குவதற்கு ஒவ்வொரு பெட்டிக்கு சுமை கூலியை ரூ.4-ல் இருந்து ரூ.6 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஏற்றுவதற்கான கூலியை தமிழ்நாடு முழுவதும் ஒரே தொகையாக சீராக வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் டாஸ்மாக் கிட்டங்கி சுமைப்பணி தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்