தரங்கம்பாடி பேரூராட்சி கூட்டம்

உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என தரங்கம்பாடி பேரூராட்சி கூட்டத்தில் அதன் தலைவர் சுகுணாசங்கரி குமரவேல் கூறினார்.

Update: 2022-10-02 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் சுகுணாசங்கரி குமரவேல் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பொன்ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பேசியதாவது:-

ஆனந்தி(அ.தி.மு.க.):- தரங்கம்பாடி 5-வது வார்டில் வ.உ.சி.தெருவில் மழைநீர் தேங்காமல் இருக்க சாலையை சீரமைக்க வேண்டும். பாரதியார் வீதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடைகள்

ஜோன்ஸ் செல்லப்பா(தி.மு.க.):- 9-வது வார்டில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை கடிப்பதால் கொசு மருந்து அடிக்க வேண்டும். மேலும், பேரூராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகள் மற்றும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறையாறு பஸ் நிலையம் அருகே வாரச்சந்தையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

அனார்கலி(இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்):- 16-வது வார்டில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் இந்த பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய்களை பிடிக்க வேண்டும்.

சுந்தரமூர்த்தி(விடுதலை சிறுத்தைகள் கட்சி):- 17-வது வார்டு மரகத காலனியில் பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து தர வேண்டும்.

இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

நிறைவேற்றி தரப்படும்

பேரூராட்சி தலைவர்: உறுப்பினா்களின் கோரிக்கைகள் மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வாா்டு மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிைறவேற்றி தரப்படும் என்றாா். கூட்டத்தில் இளநிலை உதவியாளர் மதியரசன் உள்பட அலுவலர்கள், அனைத்து வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் இளங்கோ நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்