தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரதம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-18 19:16 GMT

உண்ணாவிரதம்

கரூர் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் தலைமை தபால் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பொன்னம்பலம் தலைமை தாங்கினார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், மாநில துணை செயலாளர் ஜெயராஜ், மாவட்ட செயலாளர் மணிகண்டன், அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் பாரதிதாசன் உள்பட பலர் கலந்து ெகாண்டனா்.

20 அம்ச கோரிக்கைகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைந்து சமவேலைக்கு சமஊதியம் வழங்கிட வேண்டும். இ.எம்.ஐ.எஸ். வலைதளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை முற்றிலுமாக நிறுத்திட வேண்டும். ஒரே நாடு ஒரே கொள்கை என்ற அடிப்படையில் ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்த வேண்டும்.

மத்திய அரசு இதற்கான நிதியை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகங்கள் (தொடக்க கல்வி) மற்றும் வட்டார கல்வி அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்ததாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்