தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஆரணியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-02-21 09:03 GMT

ஆரணி

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட துணைச் செயலாளர் ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஆரணி கிழக்கு, மேற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

முழு கூலி வழங்குவது உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஊராட்சிகளிலும் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளை சரியாக கணக்கெடுத்து அவர்களுக்கு 100 நாள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும் வகையில் பணியிடங்கள் குறித்தும், வேலைகள் குறித்தும், வேலை திட்டத்தை உருவாக்க வேண்டும்,

சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்தி வேலை திட்டத்தை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும், 2022-ம் ஆண்டு 100 நாள் வேலையில் பணி முடிக்காமல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் கோரிக்கை மனுவினை ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தேசிய வேலை உறுதி அளிப்பு திட்ட அலுவலரான வாணியிடம் வழங்கினர்.

அதேபோல மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சவீதாவிடமும் கோரிக்கை மனு வழங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்