தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-10-19 20:39 GMT

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமாராண்டி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பெருமாள் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்தி பசும்பாலுக்கு ரூ.45 ஆகவும் எருமை பாலுக்கு ரூ.54 ஆகவும் அறிவிக்க வேண்டும். தரமான கால்நடைத்தீவனங்களை 50சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். சங்க ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்