மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறது தமிழக அரசு - அண்ணாமலை

மத்திய அரசு தேவையான நிதியை வழங்கும் என்று நம்புகிறோம், என கூறினார்.

Update: 2023-12-24 04:32 GMT

கோவை, 

தமிழக அரசு மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பிற்கு அந்த மாநில அரசு கேட்ட  நிவாரண நிதியை விட குறைவான நிதியே கொடுக்கப்பட்டது. இது போன்ற பல்வேறு உதாரணங்களை கூறி தி.மு.க வின் பொய்களை வெளிப்படுத்தலாம். பாதிப்பின் அளவை பொறுத்து மத்திய அரசு நிதியை வழங்கும்.

சென்னை பாதிப்பிற்கு தற்போது நிதி கேட்கப்பட்டுள்ளது, தென்மாவட்டங்களில் பாதிப்பு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு நிதியை வழங்கும் என்று நம்புகிறோம். மேலும் மத்திய நிதி மந்திரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யவுள்ளார்.

மேலும், 12-ம் தேதியே கனமழைக்கான முன்னெச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. கனமழைக்கு தேவையான நடவடிக்கை எடுக்காமல் சேலம் மாநாடு மற்றும் இந்தியா கூட்டணி மீதுதான் தி.மு.க கவனத்தில் இருந்தது. வானிலை மையம் மீது குறை கூறி திசை திருப்ப பார்க்கிறது, என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்