தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-01 16:54 GMT

தூத்துக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எஸ்.எம்.ராமையா முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் நல்லையா ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

கோரிக்கை

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மின்சார சட்டத்திருத்த மசோதா 2022-ஐ திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் 13 மாத கால கோரிக்கைகளை ஒப்புதல் அளித்த படி மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி நெல் குவிண்டாலுக்கு ரூ.2500-ம், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் வெள்ளைச்சாமி, சுப்புதுரை, அசோக், சோலையப்பன், ரவி, விக்னேஷ், முனியசாமி, கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்