தமிழ்நாடு வட்ட பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர் பதவி ஏற்பு
பி.எஸ்.என்.எல். புதிய தலைமை பொது மேலாளராக தமிழ்மணி பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
சென்னை,
தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தின் (பி.எஸ்.என்.எல்.) புதிய தலைமை பொது மேலாளராக தமிழ்மணி நியமிக்கப்பட்டார். சென்னையில் உள்ள அலுவலகத்தில் இவர் நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர், இந்திய தொலைத்தொடர்பு சேவையின் கடந்த 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பிரிவில் பட்டம் பெற்றவர். எம்.பி.ஏ. ஸ்காலர் டெலிகாம் மேனேஜ்மென்ட்டில் நிபுணத்துவம் மற்றும் மனிதவள மேலாண்மையில் முதுகலை டிப்ளமோ பெற்றவர்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மனித வளமேலாண்மை, தொலைதூர இணைப்பு, தூத்துக்குடி- இலங்கை கடல் வழி கேபிள் நெட்வொர்க் மற்றும் சென்னை- அந்தமான் கடல் வழி கேபிள் நெட்வொர்க் போன்றவற்றில் அனுபவம் வாய்ந்தவர். தமிழ்நாடு வட்டத்தின் வாடிக்கையாளர்களுக்கு சேவையின் தரத்தை மேம்படுத்துவதும், சிறந்த வாடிக்கையாளர் சேவையை உறுதி செய்வதும் இவருடைய முதன்மை பணியாக அமையும் என்று பி.எஸ்.என்.எல். விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.