தமிழக பா.ஜனதாவினர் மத்திய அரசிடம் இருந்து பேரிடர் நிதியை பெற்றுத் தர வேண்டும் - கே.எஸ்.அழகிரி

தமிழக மக்களை மாற்றான் தாய் மக்களாகத்தான் மத்திய அரசு பார்க்கிறது என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2023-12-23 18:00 GMT

சென்னை,

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கான நிவாரண நிதியை தமிழக அரசுக்கு வழங்குவது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி வருமாறு:-

வரலாறு காணாத வெள்ளத்தையும் மழையையும் சென்னையும், தென் தமிழகமும் சந்தித்திருக்கின்றன. இந்த நிமிடம் வரை மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை. அந்த நிதிக்கு பெயரே இயற்கை பேரிடர் நிதிதான். பேரிடர் ஏற்பட்டதுமே அவர்கள் அதை அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஒரு வரி எழுதி அனுப்புவதற்கு மத்திய அரசு இவ்வளவு தயங்குகிறது. தமிழக மக்களை மாற்றான் தாய் மக்களாகத்தான் மத்திய அரசு பார்க்கிறது.

தமிழக பா.ஜனதா தலைமையில் இருக்கிறவர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு அழுத்தம் கொடுத்து நிதியை பெற்று தர வேண்டும். இங்கு இருந்து கொண்டு ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதால் எந்த பலனும் கிடையாது. எந்த முயற்சியும் செய்யாமல், நடந்து கொண்டிருக்கிற நிவாரண வேலைகளை குறை சொல்வது, இதுபோன்ற பேரிடர் காலத்தில் ஏற்புடையது அல்ல. மக்கள் அதை விரும்ப மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்