தமிழர் விடுதலை களம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புளியங்குடியில் தமிழர் விடுதலை களம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புளியங்குடி:
பூலித்தேவனின் படையில் படைத்தளபதியாக திகழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் வெண்ணி காலாடிக்கு மணிமண்டபம் அமைத்து தரக்கோரி புளியங்குடியில் தமிழர் விடுதலை களம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஸ்நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ் பாண்டியன் வரவேற்றார். மாவட்ட தலைவர் குமார், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழர் விடுதலை களம் நிறுவனத்தலைவர் ராஜ்குமார் பாண்டியன் சிறப்புரையாற்றினார். தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகி கடலரசன். நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் சேகர், அழகிரி, முத்துப்பாண்டி, ஈஸ்வர பாண்டியன், வேங்கை ராஜா, வெள்ளை பாண்டியர், வாசுதேவன், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.