தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வரும் மார்ச்26-ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2023-02-02 13:55 GMT

சென்னை,

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மார்ச் 26-ல் தேர்தல் நடைபெறுகிறது. அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிடுவர்கள் பிப்.23 காலை 11 மணி முதல் பிப்.26 மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பம் வழங்கப்படும்.

மார்ச் 26-ல் தேர்தல் நடத்தப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்