தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு

திருவாரூருக்கு வந்த தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2023-04-09 18:45 GMT

கொரடாச்சேரி:

திருவாரூருக்கு வந்த தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிறப்பான வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி, தாம்பரம்- செங்கோட்டை அதிவிரைவு ரெயிலை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருவாரூருக்கு இரவு 11.30-க்கு வந்தது. அப்போது ரெயிலுக்கு எம். செல்வராஜ் எம்.பி., திருச்சி கோட்ட முதுநிலை இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார், திருச்சி கோட்ட வணிக முதுநிலை மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் திருவாரூர் மாவட்ட ெரயில்வே உபயோகிப்போர் சங்கம், விஜயபுரம் வர்த்தகர் சங்கம், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், வங்கி ஊழியர் சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

கேட் கீப்பர் பற்றாகுறை

இதுகுறித்து எம்.செல்வராஜ் எம்.பி. கூறுகையில் தாம்பரம்- செங்கோட்டை அதிவிரைவு ெரயில் வாரம் 3 முறை இயக்கப்பட உள்ளது. தற்போது திருவாரூர் காரைக்குடி இடையே கேட் கிப்பர் பற்றாக்குறை இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கும், திங்கட்கிழமை செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கும் வாரம் ஒரு முறை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1-ந் தேதி முதல் வாரம் 3 முறை இயங்கும். ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கும் இயக்கப்படும்.

16 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கம்

அதிவிரைவு ெரயில் என்பதால் குறைவான ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படுகிறது. கூடுதல் ரெயில் நிலையங்களில் நிறத்த முயற்சி செய்யப்படும். விரைவில் இந்த வழித் தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க வலியுறுத்தி வருகிறோர்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவாரூர் மாவட்ட ெரயில் உபயோகிப்போர் சங்கத்தின் செயலர் பாஸ்கரன் கூறுகையில், ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தடத்தில் ஒரு அதிவிரைவு ெரயில் இயக்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ரெயிலுக்கு 'கிழக்கு டெல்டா எக்ஸ்பிரஸ் என பெயர் வைக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்