தெரிந்தவர்போல் மனைவியிடம் பேச்சு; தட்டிக்கேட்ட கணவரை தாக்கியவர் கைது

தெரிந்தவர்போல் மனைவியிடம் பேச்சு; தட்டிக்கேட்ட கணவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-07 20:13 GMT

விராலிமலை ஒன்றியம், ஆவூர் அருகே உள்ள பிடாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 38). இவரும், இவரது மனைவி ரம்யாவும் நேற்று முன்தினம் மாலை மாத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் சரத்குமார்(28) மற்றும் முத்துப்பாண்டி ஆகிய இருவரும் ஓட்டலில் உணவு அருந்திக் கொண்டிருந்த பழனிவேல் மனைவி ரம்யாவிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அதைப்பார்த்த பழனிவேல் ஏன் என் மனைவியிடம் தெரிந்தவர்போல் வந்து தேவையில்லாமல் பேசுகிறீர்கள் என்று கண்டித்துள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறில் சரத்குமார், முத்துப்பாண்டி ஆகிய இருவரும் சேர்ந்து பழனிவேலை ஓட்டலில் இருந்த கரண்டியை எடுத்து பலமாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பழனிவேல் இதுகுறித்து மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய முத்துப்பாண்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்