அரசின் திட்டங்களை எடுத்து கூறினர்: பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு-கலைத்திருவிழாவில் வில்லுப்பாட்டாக பாடி மாணவர்கள் அசத்தல்

அரசின் திட்டங்களை எடுத்து கூறி பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் கலை திருவிழாவில் வில்லுப்பாட்டாக பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Update: 2022-12-08 18:45 GMT

பொள்ளாச்சி

அரசின் திட்டங்களை எடுத்து கூறி பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் கலை திருவிழாவில் வில்லுப்பாட்டாக பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

கலைத்திருவிழா

தமிழக அரசின் பள்ளி கல்வி துறை மூலம் மாணவ-மாணவிகளின் தனித்திறமையை வெளிபடுத்தும் வகையில் கலைத்திருவிழா நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி பள்ளிகளை தொடர்ந்து ஒன்றிய அளவில் வெற்றி மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நேற்று நடைபெற்றது.

பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்க கல்வி) வள்ளியம்மாள் போட்டிகளை தொடங்கிவைத்தார். கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி பார்வையிட்டார். இதில் பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, வால்பாறை பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினார்கள். போட்டிகளை பள்ளி துணை ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், ஜெயசந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.

வில்லுப்பாட்டு

போட்டியில் பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும், அதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வில்லுப்பாட்டாக பாடி அசத்தினர். வில்லுப்பாட்டில் மாணவர்கள் ஆண்களை படிக்க வைப்பதை போன்று பெண்களை படிக்க வைக்க பெற்றோர் விரும்புவதில்லை. இதன் காரணமாக தமிழக அரசு பெண் கல்வியை ஊக்குவிக்க புதுமை பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை, 16 வகையான பொருட்கள் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பாடலாக பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்