தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-10-11 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்ட சி.ஐ.டி.யூ. தையல் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தையல் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு 5 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும், இலவச தையல் மிஷின்கள் வழங்க வேண்டும், இலவச மின்சாரம் வழங்க வேண்டும், நலவாரியம் மூலமாக ரூ.5 ஆயிரம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் போன்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் நாகசுந்தரம்மாள் தலைமை தாங்கினார். தையல் கலைஞர் சங்க மாவட்ட பொருளாளர் விஜயலட்சுமி, மாவட்ட செயலாளர் ஞானசேகர், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் மலைராஜன், மாவட்ட தலைவர் சந்தானம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவாஜி சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான தையல் கலைஞர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்