திருப்புவனம் அருகே விபத்தில் தாசில்தார்-மகள் படுகாயம்

திருப்புவனம் அருகே விபத்தில் தாசில்தார்-மகள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-08-13 19:00 GMT

திருப்புவனம்,

திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரராக பணிபுரிபவர் கண்ணன் (வயது 54). இவர் பாக்கியா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று தனது மகள் மனோஆனந்தியுடன் (21) திருப்புவனம் டவுனில் இருந்து பொருட்கள் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அந்த இருசக்கர வாகனத்தை தாசில்தார் கண்ணன் ஓட்டி சென்றார். பாக்கியா நகர் சாலை அருகே வந்த போது மடப்புரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த சிவகாமி (19) என்பவர் ஓட்டி வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில் தாசில்தார் கண்ணன் அவருடைய மகள் மனோஆனந்திக்கும் காயம் ஏற்பட்டது. இதே போல் அந்த வாகனத்தை ஓட்டி வந்த சிவகாமிக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த தாசில்தார் கண்ணன், மகள் மனோஆனந்தி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் காயமடைந்த சிவகாமியும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்