போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
ஓசூர் அட்கோ போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஓசூர்
ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மகேந்திர ராவ். இவரிடம், ஒரு பிரச்சினை தொடர்பாக புகார் அளித்த பெண்ணை அவமரியாதையாக பேசியதாகவும், பெண்ணின் புகார் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், புகார் சம்பந்தமாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து, அது குறித்து கேட்டபோது, தன்னை அவமதித்து பேசியதாகவும் பாதிக்கப்பட்ட பெண், ஆதாரத்துடன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணைக்கு பிறகு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரராவை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் நேற்று பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.