தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடக்கம் - மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை தகவல்
500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இதன்படி 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை தெரிவித்துள்ளது.
வழிபாட்டுத் தளங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள், குறைந்த வருமானம் ஈட்டக்கூடிய டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து, அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.