80 இடங்களில் கண்காணிப்பு கேமரா

80 இடங்களில் கண்காணிப்பு கேமரா

Update: 2022-12-19 18:45 GMT

வால்பாறை

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் கடந்த வாரம் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. அப்போது புலிகளின் கால்தடம் பதிவு செய்யப்பட்ட இடத்தில், தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது. அதன்படி 294 பாதையில் 588 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதில் மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் 80 இடங்களில் 160 கேமராக்கள் பொருத்தும் பணியை வனச்சரகர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெறும் கணக்கெடுப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தேசிய புலிகள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்