குடியிருப்பு பகுதியில் ஏரி உபரி நீர் புகுந்தது

ஆரணி அருகே குடியிருப்பு பகுதியில் ஏரி உபரிநீர் மற்றும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2022-12-13 13:26 GMT

ஆரணி

ஆரணி அருகே குடியிருப்பு பகுதியில் ஏரி உபரிநீர் மற்றும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

ஏரி உபரிநீர் புகுந்தது

ஆரணி அருகே அக்ராபாளையம் கிராமத்தில் இருந்து ஆரணி - வேலூர் சாலையில் அமைந்துள்ளது சக்திபுரம் நகர். இங்கு சுமார் 25 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

சமீபத்தில் பெய்த மழையில் அக்ராபாளையம் பெரிய ஏரி நிரம்பி அதன் உபரிநீர் மதகுகள் வழியாக வெளியேறி வருகிறது.

இவ்வாறு வெளியேறும் நீர் முறையான கால்வாய்கள் பராமரிக்கப்படாததாலும் தூர்வாரப்படாததாலும் அருகிலுள்ள விளை நிலங்கள் வழியாக குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

அதன்படி ஏரி உபரிநீர் மற்றும் கழிவுநீர் சக்திபுரம் நகர் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்தது. இதனால் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருக்கிறது.

விஷ பூச்சிகள்

இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதால் பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் வீட்டிற்குள் நுழைந்து விடும் அபாயம் உள்ளது.

இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்துடனே வாழ வேண்டி உள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தண்ணீர் வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு கால்வாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்