அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் - பயணிகள் குற்றச்சாட்டு
தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தஞ்சையிலிருந்து பட்டுகோட்டை செல்வதற்கு ரூ.35 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் சமீப காலமாக கும்பகோணம் கோட்டக் கழக பேருந்துகளில் காப்பீடு மற்றும் சுங்க வரி என கூடுதலாக ரூ.9 சேர்த்து ரூ.45 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக பயணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுங்கச்சாவடியே இல்லாத போது சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.