அடர்த்தியான மின் பயன்பாட்டு நேரத்திற்கு கூடுதல் கட்டணம் - மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

அடர்த்தியான மின் பயன்பாட்டு நேரத்திற்கு கூடுதல் கட்டணம் விதித்துள்ள மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2023-06-25 19:14 GMT

சென்னை,

அடர்த்தியான மின் பயன்பாட்டு நேரத்திற்கு கூடுதல் கட்டணம் விதித்துள்ள மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாஜக ஒன்றிய அரசு, அடர்த்தியான மின் பயன்பாட்டு நேரத்தில் மின் நுகர்வோர் உபயோகிக்கும் மின்சாரத்துக்கு, வழக்கமாக உள்ள கட்டணத்துடன் மேலும் 20 சதவீதம் கூடுதல் கட்டணம் விதித்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மின்சார உபயோகத்தை சராசரி கணக்கிட்டு வைப்பு நிதி என்ற பெயரில் பெரும் தொகை வசூலிக்கப்படுகிறது. இது வாக்களித்த மக்களுக்கு இழைக்கபட்டுள்ள பெரும் அநீதியாகும். அண்மையில் தான் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை பெற்று, கட்டண உயர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஒன்றிய அரசு காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது பகல் கொள்ளையை விட கொடியது. இந்த மக்கள் விரோத மின் கட்டண உயர்வுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்