38 மாணவ-மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் வழங்கல்
38 மாணவ-மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது.
புகழூர் காகித ஆலை சார்பில் ஆண்டுதோறும் புகழூர் நகராட்சிக்குட்பட்ட ஓனவாக்கல்மேடு கிராமத்தை சேர்ந்த நலிவுற்ற சமுதாயத்தை சேர்ந்த குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காகித ஆலை நிறுவனம் சார்பில் பள்ளியில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2023-2024-ம் கல்வியாண்டில் காகித ஆலை நிர்வாகம் சார்பில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை இலவச பள்ளிக்கல்வியில் படித்து வரும் ஓனவாக்கல்மேடு கிராமத்தை சேர்ந்த 38 மாணவ-மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி புகழூர் காகித ஆலை வளாகத்தில் நடைபெற்றது.
இதில், காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குனர் (இயக்கம்) சீனிவாசன், பொதுமேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன், முதுநிலை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் கலந்து கொண்டு, 38 மாணவ-மாணவிகளுக்கு பள்ளி சீருடைகளை வழங்கினர்.