விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற போலீசாருக்கு சூப்பிரண்டு சக்திகணேசன் பாராட்டு

விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பாராட்டினார்.

Update: 2022-05-24 17:09 GMT

கடலூர், 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 4-வது தேசிய மாஸ்டர் விளையாட்டு போட்டி நடந்தது. இதில் கடலூர் ஆயுதப்படை ஏட்டு ஞானமுருகன் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான கபடி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றார்.

கடலூரில் நடந்த அகில இந்திய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் 35 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கடலூர் ஆயுதப்படை போலீஸ்காரர் ஷாம்பிரகாஷ் தொடர் ஓட்டப்பந்தயங்களில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம், 100 மீ, 200 மீ, 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.

30 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் போலீஸ்காரர் ரஞ்சித் தொடர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம், 200 மீட்டர் பிரிவில் 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கமும், கடலூர் துறைமுக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தொடர் ஓட்டப்பந்தயத்தில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கமும், 100 மீ, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தையும் வென்றனர். பதக்கம் வென்ற போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து, அவர்களை பாராட்டினார். அப்போது ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்