`விநாயகர் சிலை ஊர்வலத்தில் அமைதி காக்க வேண்டும்' கலந்தாய்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பேச்சு

விநாயகர் சிலை ஊர்வலத்தில் அமைதி காக்க வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பேசினார்.

Update: 2022-08-30 21:02 GMT

விநாயகர் சிலை ஊர்வலத்தில் அமைதி காக்க வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பேசினார்.

கலந்தாய்வு கூட்டம்

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாதுகாப்பு

போலீசாரால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விநாயகர் சிலை அமைத்திருக்க வேண்டும். விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும். சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் தகரத்திலான ஷெட் அமைத்திருக்க வேண்டும்.

சிலைகள் அமைந்துள்ள இடத்தில் தீ தடுப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும். விநாயகர் சிலை வைத்திருக்கும் இடத்தில் தன்னார்வலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அமைதி காக்க வேண்டும்

குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக சிலையை எடுத்துச் செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது பொது அமைதி காத்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் சூப்பிரண்டு ராஜு மற்றும் விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்