வாகனங்கள் நிறுத்துவது குறித்து பக்தர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவது குறித்து போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார்.;
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு கோவிலுக்கு வர வேண்டும். விழாவில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் காரணத்தால் பெண் பக்தர்கள் விலை உயர்ந்த நகைகளை அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும். கோவில் வளாகத்தில் தங்கள் குழந்தைகளை கை பிடித்து கூட்டிச்செல்ல வேண்டும். கூட்டத்தில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு செல்லக்கூடாது. ஆண்கள் செல்போன் மற்றும் பணத்தை சட்டை பையில் வைத்து செல்வதை தவிா்க்க வேண்டும். பக்தர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையத்தை அணுகலாம். மேலும் அவசர உதவிக்கு போலீசாரை 9498100690 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா ேதவி தெரிவித்துள்ளார்.