இந்து அமைப்பினருடன் போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை

இந்து அமைப்பினருடன் போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-09-13 19:14 GMT

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்து அமைப்பினர், பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள், இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது, விநாயகர் சிலை வைத்தல் மற்றும் சிலை ஊர்வலத்தின்போது, பின்பற்றவேண்டிய விதிமுறைகள் பற்றி அவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. அத்துடன், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும், புதிய வழித்தடத்தில் செல்லக்கூடாது, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கும் விசர்ஜனம் செய்வதற்கும் தமிழக அரசு வழங்கி உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி, போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்