போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு
சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை கேட்டறிந்ததோடு, அதனை விரைந்து முடிக்க வேண்டும் என போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் போலீஸ் நிலையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.