பெரம்பலூரில் கொட்டித்தீர்த்த கோடை மழை

பெரம்பலூரில் கோடை மழை கொட்டித்தீர்த்தது.

Update: 2023-04-29 19:03 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்களில் பெரும்பாலானோர் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கி கிடக்கின்றனர்.வெயிலின் கொடுமையால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனாலும் கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது. பெரம்பலூரில் நேற்று பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் மதியம் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக கோடை மழை கொட்டித்தீர்த்தது. மேலும் மழை பெய்யும் போது பலத்த காற்று வீசியதால் விளம்பர பதாகைகள் சரிந்து கீழே விழுந்தன. மழை நீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மதியம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. மேலும் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்