போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை

மின்விசிறியில் சேலையால் செல்வராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2024-07-15 23:50 IST

நாமக்கல்,

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் செல்வராஜ் (வயது 47). இவர் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி ரேணுகாதேவி. இவர் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தார். இவர்களுக்கு கிரண்குமார் (19) என்ற மகனும், ஜனனி (17) என்ற மகளும் உள்ளனர். செல்வராஜ் தனது குடும்பத்துடன் ராசிபுரத்தில் வசித்து வந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ரேணுகாதேவி இறந்து விட்டார். இதனால் செல்வராஜ் மன வேதனையில் இருந்து வந்து உள்ளார். இதையடுத்து செல்வராஜ் திருச்செங்கோடு அருகே எளையாம்பாளையத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டின் மின்விசிறியில் சேலையால் செல்வராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருச்செங்கோடு ரூரல் போலீசார், செல்வராஜ் உடலை கைப்பற்றி அதே ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு செல்வராஜ் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்