மொரப்பூர்
கம்பைநல்லூர் அருகே உள்ள சின்னாகவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி விஜயா (வயது 67). இவர்களது மகன் மணிவண்ணன் (36). இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கணவர் இறந்து விட்டதாலும், மகன் ஓசூரில் வேலை செய்து வருவதாலும் விஜயா மட்டும் தனியாக வசித்து வந்தார். ஆதரவின்றி காணப்பட்ட விஜயா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வான்மதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.