திருமணம் ஆகாத விரக்தியில்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-04-19 19:00 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள ஓலப்பாளையம் மங்களமேடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 47). கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் சமீப காலமாக விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சேகரின் பெற்றோர் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு சேகர் விட்டத்தில் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக மகனை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்