2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு சாவு

மோகனூர் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-11 18:45 GMT

மோகனூர்

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலையை சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரது மகள் கார்த்திகா (வயது 23) என்பவருக்கும் நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே கீழ் பாலபட்டியை சேர்ந்தவர் புக்கராண்டி மகன் சேகர் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவா்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கார்த்திகாவுக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று மீண்டும் வயிற்றுவலியால் அவதிப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கார்த்திகாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கார்த்திகாவின் தாயார் சாவித்திரி (43) என்பவர் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்