விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

திருச்செங்கோட்டில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-01 20:09 GMT

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு நாகர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அர்த்தனாரி. கூலித்தொழிலாளி இவரது மகன் தனுஷ் (வயது 19). இந்தநிலையில் தனுஷ் வேலைக்கு செல்லாமல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் தனுஷ் மன வேதனையில் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் தனுஷ் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள பாறையில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தனுஷை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்