வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்செங்கோட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எலச்சிபாளையம்
தொழிலாளி
திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனி பகுதியை சேர்ந்த தங்கவேல். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 27). இவருக்கு திருமணமாகவில்லை. மீன்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இவர் தீபாவளி அன்று இரவு வீட்டில் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்க்தினர் தினேஷ்குமாரை மீட்டு திருச்செங்கோடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது தினேஷ்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விசாரணை
இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பின்னர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.