முதுகுவலியால் அவதிப்பட்ட முதியவர் தற்கொலை

முதுகுவலியால் அவதிப்பட்ட முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-22 21:44 GMT

கன்னங்குறிச்சி:

கன்னங்குறிச்சி பேரூராட்சி 3-வது வார்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 61). ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரான இவருக்கு கடந்த சில மாதங்களாக முதுகு தண்டுவடத்தில் வலி இருந்து வந்தது. இதற்கு பல இடங்களிலும் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் சுந்தர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் விஷத்தை குடித்து விட்டார். இதையடுத்து வீட்டில் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்