மனைவியுடன் தகராறு: வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு சாவு

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பரமத்தி அருகே வடமாநில தொழிலாளி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-28 18:00 GMT

பரமத்திவேலூர்:

வடமாநில தொழிலாளி தற்கொலை

பரமத்தி அருகே உள்ள ஜங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மகேஷ். இவருடைய கோழிப்பண்ணையில் பீகார் மாநிலம் செரியானா தாலுகா மிஸ்ராயுளியாவை சேர்ந்த டுன்டுன் குமார் (வயது 20) தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், சில்பி தேவி என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

இதனிடையே டுன்டுன்குமார் தனது மனைவியை பீகார் மாநிலத்தில் விட்டு விட்டு தான் மட்டும் பரமத்தி அருகே கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை அவர் அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்தி போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.

மனைவியுடன் தகராறு

அப்போது மனைவியுடன் செல்போனில் பேசியபோது ஏற்பட்ட தகராறு காரணமாக டுன்டுன்குமார் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டுன்டுன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்